தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு

 ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு

 ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு


ADDED : மார் 16, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: நடப்பு கல்வியாண்டில் ஓய்வு பெறவுள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் விபரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

நடப்பு கல்வியாண்டு, மே 31ம் தேதியுடன் முடியவுள்ளது. இந்நிலையில், ஓய்வு பெற்ற, ஓய்வு பெறவுள்ள தலைமை ஆசிரியர்கள், அலுவலர்களின் பணிக் காலம் தணிக்கை செய் யப்பட உள்ளது.

இந்த தணிக்கை முடிக்கப்பட்டு, தடையின்மை சான்று வழங்கப்பட்ட பின், ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும்.

ஓய்வு பெறவுள்ள தலைமை ஆசிரியர்கள், தங்கள் விபரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து, பள்ளிக்கல்வி இயக்கக நிதி ஆலோசகர், முதன்மை கணக்கு அலுவலருக்கு, மார்ச் 18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்விதுறை அறிவுறுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us