ADDED : ஏப் 21, 2025 05:19 AM
சென்னை : தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
கொரோனா காலத்தில் நிதி நிலைமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட, ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு சலுகையை உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும். ஊதியக்குழு முரண்பாடு களை களைய வேண்டும்.
வருவாய் துறையில் தேக்கமடைந்துள்ள கோப்புகளுக்கு தீர்வு காண, பணியிடங்களை இரட்டிப்பாக ஏற்படுத்த வேண்டும்.
பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட எந்தப் பிரிவிலும், பணியிடங்கள் கலைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
சென்னை எழிலகம் வளாகத்தில், பழைய சம்பள கணக்கு அலுவலகம் எதிரில், 24ம் தேதி மாலை 4:00 மணிக்கு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கும்.
மாநிலம் முழுதும் இருந்து, 12 சங்கங்களை சேர்ந்த வருவாய் துறை பணியாளர்கள் பங்கேற்பர் என, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

