ADDED : பிப் 14, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பதவி உயர்வு பட்டியல்கள் திருத்தத்தால், பணியிறக்கம் பெற்ற அலுவலர்களின், பணி பாதுகாப்பு அரசாணையை, உடனடியாக வெளியிட வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தனர்.
மாவட்ட தலைநகரங்களில், உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த, உண்ணாவிரத போராட்டத்திற்கு, முருகையன் தலைமை வகித்தார். மாவட்ட தலைநகரங்களில், உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால், வரும், 22ம் தேதி முதல் வேலையை புறக்கணித்து, அலுவலக வாயிலில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து உள்ளனர்.

