தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ புத்துயிர் பெறும் திண்டிவனம் - தி.மலை புதிய ரயில் பாதை திட்டம்

 புத்துயிர் பெறும் திண்டிவனம் - தி.மலை புதிய ரயில் பாதை திட்டம்

 புத்துயிர் பெறும் திண்டிவனம் - தி.மலை புதிய ரயில் பாதை திட்டம்


ADDED : ஏப் 01, 2026 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 02:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'மாநில அரசு நிலம் கையகப்படுத்தி தர உள்ளதால், திண்டிவனம் - திருவண்ணாமலை இடையே, புதிய ரயில் பாதை பணி விரைவுப்படுத்தப்படும்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் சேவை ஏற்படுத்தும் திட்டம், 2008ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

தேவையான நிலத்தை கையகப்படுத்தி தருவதில், பல ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டது. இதனால், இந்த திட்டம் கிடப்பில் இருந்தது.

இதற்கிடையே, இந்த திட்டத்துக்கான நிலத்தை கையகப்படுத்தித் தர, மாநில அரசு ஆர்வம் காட்டியிருப்பதால், இந்த புதிய பாதைப் பணி மீண்டும் வேகமெடுத்துள்ளது.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் இருந்து திண்டிவனம் வரை உள்ள நேரடி பாதையில், செஞ்சி வழியாக திருவண்ணாமலை செல்ல, 70 கி.மீ., துாரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க, கடந்த 2008ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.

ஆனால், மாநில அரசு நிலம் கையகப்படுத்துவதில், பல ஆண்டுகளாக தாமதம் செய்தது. ரயில்வேயும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை. தற்போது, இந்த தடத்தில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும், பயணியர் ரயில் மட்டுமின்றி, சரக்கு போக்குவரத்தையும் உருவாக்க, ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழக அரசும் இந்த திட்டத்துக்கு தேவையான, 229 ஹெக்டர் நிலத்தை கையகப்படுத்தி வழங்க உறுதி அளித்துள்ளது.

சில இடங்களில், இதற்கான பணிகளும் துவங்கப்பட்டு உள்ளன. 1,400 கோடி ரூபாயில் இந்த திட்டத்தை செயல்படுத்த, ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே, புதிய ரயில் பாதை திட்டப் பணிகள் வேகமெடுத்துள்ளன. வரும், 2028ல் பணிகள் முடியும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us