தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இரட்டை இலையில் போட்டியிடுகிறது புரட்சி பாரதம்

 இரட்டை இலையில் போட்டியிடுகிறது புரட்சி பாரதம்

 இரட்டை இலையில் போட்டியிடுகிறது புரட்சி பாரதம்


ADDED : மார் 28, 2026 07:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 07:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி, சென்னையில் நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்தார்.

பின், அவர் அளித்த பேட்டி: தே.ஜ., கூட்டணியில், புரட்சி பாரதம் கட்சிக்கு வேலுார் மாவட்டம், கே.வி .குப்பம் தொகுதியை ஒதுக்கினர்.

எங்கள் கட்சி நிர்வாகிகள் சிலர், கூடுதல் 'சீட்' வேண்டுமென கோரிக்கை வைத்ததால், கட்சியின் நிர்வாகக் குழு கூடியது. அதில், 'முடிந்த வரை முயற்சி செய்வது, இல்லையென்றாலும் தே.ஜ., கூட்டணியில் நீடிப்பது' என தீர்மானித்தோம்.

அதன்படி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்தோம். அவர், 'எந்த வகையிலும், புரட்சி பாரதம் கட்சியை கைவிட மாட்டோம்' என உறுதி அளித்தார். எங்கள் தொண்டர்களும், ஒரு தொகுதியை ஏற்றனர். புரட்சி பாரதம் கட்சி, கே.வி.குப்பம் தொகுதி யில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும். நான், வேட்பாளராக களமிறங்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us