அரிசி விலை குறைப்பு: மாநில அரசுக்கு ரூ.495 கோடி மிச்சம்
அரிசி விலை குறைப்பு: மாநில அரசுக்கு ரூ.495 கோடி மிச்சம்
ADDED : ஜன 30, 2025 04:46 AM

சென்னை: வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், இந்திய உணவு கழகத்திடம் இருந்து கிலோ அரிசியை, 28 ரூபாய்க்கு தமிழக அரசு வாங்குகிறது. இதன் விலையை, 22.50 ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது.
இதனால், தமிழகத்திற்கு 495 கோடி ரூபாய் மிச்சமாகிறது. தமிழக அரசு ரேஷன் கடைகளில், 2.21 கோடி கார்டுதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குகிறது. இதற்கு மாதம், 3.30 லட்சம் டன் அரிசி தேவை. முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கான, 2.04 லட்சம் டன்அரிசியை, இந்திய உணவு கழகம், தமிழகத்திற்கு இலவசமாக வழங்குகிறது.
மீதி அரிசியை, இந்திய உணவு கழகத்திடம் கிலோ, 28 ரூபாய்க்கு வாங்குகிறது. தமிழகத்திற்கு கிலோ அரிசியை, 22 ரூபாய்க்கு வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விலையில், 9 லட்சம் டன் அரிசியை வழங்குமாறு, தமிழக அரசு, இந்திய உணவு கழகத்திடம் கேட்டுள்ளது. இம்மாதம், 17ம் தேதி முதல் புதிய விலைக்கு அரிசி வழங்கப்படுகிறது. ஒன்பது லட்சம் டன் அரிசி வாங்குவதால், 495 கோடி ரூபாய் செலவு மிச்சமாகும்.