உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 14, 2026 07:05 PM
ADDED : அக் 14, 2026 05:58 PM

அ நிறம் | அளவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், அரிசி விலை உயர்வால் ஆயுத பூஜைக்கான பொரி விலை எகிறியதால், மாவட்ட சில்லரை வியாபாரிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
புதுக்கோட்டையில், ஆயுத பூஜைக்கான பொரி தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு, ஒரு மூட்டை பொரி, 380 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, ஒரு மூட்டை பொரி, 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரிசி விலை உயர்வு, பொரி தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளான நெல் மற்றும் பொரி அரிசியின் விலை, சந்தையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால், பொரி விலை இன்னமும் உயரக்கூடும்.
தமிழகத்தில், அரிசி விலை மூட்டைக்கு, 300 ரூபாய் முதல், 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால், விலை உயர்வுக்கு காரணம் என, பொரி வியாபாரிகள் தெரிவித்தனர்.
