உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 18, 2026 09:48 PM
ADDED : நவ 18, 2026 09:48 PM
அ நிறம் | அளவு
சென்னை: விரிவான சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2026 – 27ம் நிதியாண்டில், சாலைகள் விரிவாக்கம், பலப்படுத்துதல், ஊரக சாலைகள் மேம்பாடு, சாலை பாதுகாப்பு, புறவழிச்சாலைகள் அமைத்தல், மேம்பாலங்கள் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதை சட்டசபையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்தார்.
இதற்காக, நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, அரசிடம், 8,020 கோடி ரூபாய் கேட்கப்பட்டது. இந்நிலையில், 6,513 கோடி ரூபாய் வழங்க, தமிழக அரசு ஒப்புதல் வழங்கி, அரசாணை வெளியிட்டுள்ளது.
