ADDED : ஆக 13, 2025 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வந்த சாலை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
'சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக எடுத்து, ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
உண்ணாவிரதம் துவங்குவதற்கு முன், சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் கோரிக்கை மனுவை வைக்க திட்டமிட்டு இருந்தனர்.
இதற்காக, சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம், பொதுச்செயலர் அம்சராஜ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள், எழிலகம் அருகே திரண்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களில் அடைத்தனர்; மாலையில் விடுவித்தனர்.

