ADDED : ஜன 03, 2024 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, சென்னை, திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகிய மாவட்ட சாலையோர வியாபாரிகளுக்கு, 4 சதவீத வட்டியில் 10,000 ரூபாய்; 6 சதவீத வட்டியில், 1 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட உள்ளது.
இக்கடனுதவிக்கான வழிகாட்டுதல் வெளியிடுவதுடன், மழையால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என, தமிழ்நாடு சாலையோர வியாபார தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, கூட்டமைப்பின் செயலர் மகேஸ்வரன் கூறுகையில், ''சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு நன்றி.
''தென்காசி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் சாலையோர வியாபாரிகளுக்கும் கடன் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்,'' என்றார்.