ADDED : ஆக 01, 2011 10:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூரில் பால் வாங்கி வந்த பெண்ணிடம் 11 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அம்மையப்பன். இவர் கொங்கு முன்னேற்ற கழக நிர்வாகியாக இருந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (66). இவர் இன்று காலை பால் வாங்கி விட்டு வீடு திரும்பும் போது சுமார் 22 முதல் 30 வயதுடைய 3 பேர் கொண்ட மர்ம கும்பல் மோட்டர் பைக்கில் வந்து லட்சுமியின் கழுத்தில் இருந்த 11 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.லட்சுமி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்ததால் மர்ம நபர்கள் தப்பிச் செனறுள்ளனர். இது குறித்து கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.