UPDATED : செப் 01, 2011 05:24 PM
ADDED : செப் 01, 2011 02:24 PM
திருவானைக்காவல்: திருச்சி திருவானைக்காவல் சக்திநகரைச் சேர்ந்தவர் ராஜாராம்.
இவர் பர்மாபஜாரில் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் சென்னை சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு ராஜாராமின் வீட்டை உடைத்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 30 பவுன் நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி, ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலை அறிந்து திரும்பி வந்த ராஜாராம் போலீசில் புகார் அளித்தார். இதே போன்று இதே தெருவில் வசிக்கும் வங்கி ஊழியரான விஜயகுமார் என்பவரின் வீட்டை உடைத்தும் கொள்ளை கும்பல் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இவர் குடும்பத்துடன் ஆந்திரா சென்றுள்ளதால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சரியாக தெரியவில்லை. இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.