மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம்; அரசு மானியம் வழங்க கோரிக்கை
மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம்; அரசு மானியம் வழங்க கோரிக்கை
ADDED : ஜன 10, 2026 07:02 AM

சென்னை ; 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் வாசுதேவன் கூறியதாவது:
வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க ஏற்படும் செலவில், குறிப்பிட்ட தொகையை, மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.
சிறு, குறு, நடுத்தர பிரிவில் தொழில் துவங்கும்போதும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவாக்கம் செய்யும் போதும் இயந்திரங்களுக்கான செலவில், 25 சதவீதத்தை, மூலதன மானியமாக, தமிழக அரசு வழங்குகிறது.
ஆலைகளில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கு, மானியம் வழங்குவதில்லை. சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில் மின் பயன்பாட்டு கட்டண செலவை குறைக்க, மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதை, அரசு ஊக்குவிக்க வேண்டும்.
இதற்கு, சூரியசக்தி மின் சாதனங்களை, உற்பத்தி கருவிகளாக கருதி, 25 சதவீதம் மூலதன மானியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
