உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 21, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் சென்று வர ரோப் கார், வின்ச், படிப்பாதை, யானைப்பாதை உள்ளன.
ரோப் கார் சேவையில் மூன்று நிமிடங்களில் கோயில் செல்லலாம். தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்துகின்றனர். பிப்., 18 ல் தொழில்நுட்பக் கோளாறால் ரோப் கார் சேவை நான்கு மணி நேரம் பாதிக்கப்பட்டது. மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நேற்று(பிப்., 20) மதியம் முதல் நிறுத்தப்பட்டது. இன்று முழுவதும் ரோப்கார் இயங்காது. பழநி கோயில் சென்றுவர வின்ச், படிப்பாதை, யானைப்பாதையை பக்தர்கள் பயன்படுத்தலாம்.
