திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகம் 'பாஸ்' உள்ள வாகனங்கள் வரும் வழிகள்
திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகம் 'பாஸ்' உள்ள வாகனங்கள் வரும் வழிகள்
ADDED : ஜூலை 13, 2025 04:24 AM
மதுரை : நாளை (ஜூலை 14) நடக்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்திற்கு 'பாஸ்' பெற்றுள்ள வாகனங்கள் வரும் வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மஞ்சள் நிற பாஸ்
மயில் மண்டபம் சந்திப்பு, திருப்பரங்குன்றம் ஆர்ச், ஒக்கலிக்கர் மகால் சந்திப்பு வழியாக தெப்பக்குளத்தில் 'பார்க்கிங்' செய்ய வேண்டும். ஹார்விபட்டி சந்திப்பு, ஜி.எஸ்.டி., மெயின் ரோடு, பாலம் இறக்கம் வழியாகவும் தெப்பக்குளத்திற்கு வரலாம். வந்த வழியாகவே திரும்பிச்செல்ல வேண்டும்.
திருப்பரங்குன்றம் பஸ் ஸ்டாண்ட், பேட்டையில் 'பார்க்கிங்' செய்வதற்காக மயில் மண்டபம் சந்திப்பு, ஆர்ச், ஒக்கலிக்கர் மகால், நகரத்தார் மண்டபம், பாலம், சர்வீஸ் ரோடு வழியாக செல்ல வேண்டும். ஹார்விபட்டி சந்திப்பில் இருந்து ஜி.எஸ்.டி., ரோடு வழியாக வர வேண்டும். அருணகிரி நாதர் மண்டபத்தில் 'பார்க்கிங் செய்ய மேற்கண்ட வழிகள் வந்து, விழா முடிந்ததும் ஆர்ச் வழியாக வெளியேற வேண்டும்.
பச்சை நிற பாஸ்
சரவண பொய்கையில் 'பார்க்கிங்' செய்ய மூட்டா தோட்டம், ரயில்வே சப்வே, செங்குன்றம் ரோடு, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பின்புற ரோடு, கே.வி. பள்ளி சந்திப்பு, திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் ரோடு சந்திப்பு வழியாக வரவேண்டும். அவனியாபுரம் ரோடு, கே.வி. பள்ளி சந்திப்பு வழியாகவும் வரலாம். விழா முடிந்ததும் வந்த வழிகள் வழியே செல்ல வேண்டும். அவனியாபுரம் சந்திப்பில் 'பார்க்கிங்' செய்ய மேற்கண்ட வழிகளை பயன்படுத்த வேண்டும்.
'பாஸ்' உள்ள வாகனங்கள் இரவு 2:00 மணி முதல் அனுமதிக்கப்படும். 'பாஸில்' உள்ள கியூ.ஆர். கோடு மூலம் வழித்தடங்களை எளிதில் அறியலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.

