ADDED : ஜூலை 22, 2025 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நிலங்களை துல்லியமாக அளக்க, 200 'ரோவர்' கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் நிலங்களை அளந்து, எல்லைகளை வரையறை செய்யும் பணிகளை, 'டிஜிட்டல்' முறைக்கு மேம்படுத்த, நில அளவை துறை நடவடிக்கை எடுத்து வரு கிறது. இதில் பாரம்பரிய நடைமுறைகளுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட் பங்களை பயன்படுத்த, புதிய கருவிகள் வாங்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
குறிப்பாக, அதிக பரப்பளவு நிலங்களை மிக குறுகிய நேரத்தில் அளக்க, 'ரோவர்' கருவிகள் வந்துள்ளன. தமிழகத்தில் 2023ல், 150 ரோவர் கருவிகள் வாங்கப்பட்டன.
இந்நிலையில், நில அளவை துறைக்கு புதிதாக, 200 ரோவர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளை, 10 மாவட்ட நில அளவை துறை பணியாளர்களுக்கு, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் வழங்கினார்.

