ரவுடி பாஸ்கர் த.வா.க.,வில் இணைப்பு; மேடையில் மகிழ்ந்த வேல்முருகன்
ரவுடி பாஸ்கர் த.வா.க.,வில் இணைப்பு; மேடையில் மகிழ்ந்த வேல்முருகன்
ADDED : மார் 18, 2025 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம், தாதகாப்பட்டியில், த.வா.க., பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் சேலத்தை சேர்ந்த, பிரபல ரவுடி, கோழி பாஸ்கர் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், தலைவர் வேல்முருகன் முன்னிலை யில், த.வா.க.,வில் இணைந்தனர்.
அப்போது வேல்முருகன் பேசியதாவது:
இப்பகுதியில் பாஸ்கருக்கு, அன்பால் கட்டுண்ட கூட்டம் வாழ்கிறது. அவர் மேடையில் அமர்ந்துள்ளது, 1,000 மடங்கு உற்சாகத்தை தருகிறது. இப்பகுதியில் இருந்த கொடியை ஒருவர் உடைத்து சென்றுவிட்டார். அந்த படத்தை, போலீஸ் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினேன்.
அவர்கள் விசாரித்து, சம்பந்தப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்தனர்.
சேலத்தில் நம் கட்சி கொடியை உடைக்க, இதுவரை எவனும் பிறந்து வரவில்லை. அதுவும் பாஸ்கர் கோட்டையில் கொடியை உடைத்துவிடுவார்களா?
இவ்வாறு அவர் பேசினார்.