சென்னையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு; தப்ப முயன்ற போது போலீசார் நடவடிக்கை
சென்னையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு; தப்ப முயன்ற போது போலீசார் நடவடிக்கை
ADDED : டிச 09, 2024 07:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை பெரம்பூரில் ரவுடி அறிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த ஏ பிரிவு ரவுடியான அறிவழகனை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். பெரம்பூர் பனந்தோப்பு காலனி அருகே பதுங்கி இருந்த, ரவுடி அறிவழகனை பிடிக்க சென்ற போது, தப்பியோட முயற்சி செய்ததால் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
யார் இந்த அறிவழகன்?
* சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி தான் அறிவழகன்.
* இவர் வியாசர்பாடியை சேர்ந்த ஏ பிரிவு ரவுடி.
* பல்வேறு வழக்குகளில் நிலுவையில் உள்ள நிலையில், முக்கிய வழக்கு அறிவழகனை போலீசார் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.