ADDED : ஆக 10, 2025 02:45 AM
தேனி:தோட்டத்தை விற்பனை செய்வதாக கூறி, 1.07 கோடி ரூபாய் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
தேனி, எல்லப்பட்டி முன்னாள் ராணுவ வீரர் தங்கராஜ். இவரது மனைவி செல்வபாரதி, 41. தற்போது, திருப்பூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு எல்லப்பட்டியில் தோட்டம் உள்ளது.
அந்த தோட்டம் அருகே ராதாகிருஷ்ணன் என்பவரது தோட்டம் இருந்தது. தோட்டத்தை விற்பனை செய்வதாக, 2022ல் செல்வபாரதியிடம், ராதாகிருஷ்ணன் கூறினார். இதை நம்பி, 1.07 கோடி ரூபாயை ராதாகிருஷ்ணனிடம் செல்வபாரதி குடும்பத்தினர் வழங்கினர். தோட்டத்தை கிரையம் செய்ய சென்ற போது, வில்லங்கம் இருப்பது தெரிந்தது. பணத்தை திருப்பி தருமாறு ராதாகிருஷ்ணனிடம் செல்வபாரதி கேட்டார். இரு ஆண்டுகளாக பணத்தை வழங்காமல் ராதாகிருஷ்ணன் ஏமாற்றியதாக, போலீசில் செல்வபாரதி புகார் அளித்தார். தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

