ADDED : ஆக 20, 2026 01:35 AM

சென்னை: கலை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை தொடர்பாக, அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்களை, புனரமைத்து பாதுகாக்க, முதல் கட்டமாக 49 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப் பெரும்புதுார் , தொல்பழங்கால அகழ் வைப்பகம், தென்காசி மாவட்டம் குற்றாலம் நாட்டுப்புற அகழ்வைப் பகம், தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை நடுகல் அகழ்வைப்பகம் ஆகியவற்றில் உள்ள தொல்பொருட்களை, காட்சிப் படுத்த , 12 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
தொல்லியல், கள ஆய்வு, அகழாய்வு பணிக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும், 7 கோடி ரூபாய், 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்
பெரம்பலுார் மாவட்டம், பெருமத்துார் மற்றும் பென்னகோணத்தில் தீர்த்தங்கரர் சிற்பங்கள், மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் உள்ள குரங்குப்படை கல் பதுக்கை, தர்மபுரி மாவட்டம், கலம்பாடி கல்வட்டம் உள்ளிட்ட 15 வரலாற்று சின்னங்கள், பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்
நாட்டுப்புற கலை நிகழ்ச்சி முதல்வர் பங்கேற்கும் நிகழ்வுகளில், அவர் வருவதற்கு முன், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்த, அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.
இனி முதல்வர் பங்கேற்கும், அனைத்து நிகழ்வுகளிலும், 30 நிமிடங்கள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன் வாயிலாக, நாட்டுப்புற கலைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
