ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1.11 கோடி மோசடி: மூவர் மீது வழக்கு * தம்பதி உட்பட மூவர் மீது வழக்கு
ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1.11 கோடி மோசடி: மூவர் மீது வழக்கு * தம்பதி உட்பட மூவர் மீது வழக்கு
ADDED : மார் 12, 2024 02:22 AM
தேனி: தேனி அருகே ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 500, மோசடி செய்த தேனி ஊஞ்சாம்பட்டி ஜெயம்நகர் குகன்ராஜா 50, சென்னை ஆவடியை சேர்ந்த பூகீஸ்வரன் 40, அவரது மனைவி ஜெயஸ்ரீ 35, ஆகிய மூவர் மீது மாவட்ட மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
பெரியகுளம் தென்கரை அர்ச்சுணன் தெரு சிவபாலன் 27. இவரது உறவினர் தேனி ஊஞ்சாம்பட்டி ரத்தினா நகரில் உள்ள ஜெயம்நகர் குகன்ராஜா 40. இவர் மூலம் சிவபாலனுக்கு சென்னை ஆவடி பள்ளிவாசல் மசூதி தெருவில் உள்ள பூகீஸ்வரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பூகீஸ்வரன், அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் இணைந்து சிவபாலன் மற்றும் 7 பேருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பிய சிவபாலன் நேரடியாக ரூ.38 லட்சத்து 61 ஆயிரத்தை வழங்கினார். பின் வங்கி கணக்கு மூலம் ரூ.73 லட்சத்து 28 ஆயிரத்து 500 செலுத்தினார்.ரூ.1 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 500 பெற்று சிவபாலனுக்கு ரயில்வே துறையில் வேலை கிடைத்ததாக போலி ஆணை வழங்கி, மூவரும் சேர்ந்து கூட்டுச்சதி செய்து மோசடி செய்தனர். இதனால் பாதிக்கப்பட்ட சிவபாலன் தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி சென்னையை சேர்ந்த பூகீஸ்வரன், ஜெயஸ்ரீ, குகன்ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.

