ADDED : பிப் 08, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மலேஷியாவில், 19 வயதிற்கு உட்பட்ட மகளிருக்கான, 'டி20' கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில், தமிழக வீராங்கனை கமலினி, அசாத்திய சாதனைகள் புரிந்தார். அவரின் பங்களிப்பால், இந்திய அணி கோப்பையை வென்று, வரலாற்று சாதனை படைத்து உள்ளது.
அதே போல, டில்லியில் நடந்த முதல் கோ-கோ உலக கோப்பை போட்டியில், தமிழக வீரர் சுப்ரமணி அபாரமாக விளையாடியதற்காக, சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்றார்.
இறுதிப் போட்டியில் அவரின் பங்களிப்பால், இந்திய அணி கோப்பையை வென்று, வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அவர்களின் சாதனையை பாராட்டும் வகையில், கமலினி, சுப்பிரமணி ஆகியோருக்கு தலா, 25 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

