பளு துாக்கும் போட்டியில் வெள்ளி தமிழக வீரருக்கு ரூ.25 லட்சம்
பளு துாக்கும் போட்டியில் வெள்ளி தமிழக வீரருக்கு ரூ.25 லட்சம்
ADDED : நவ 06, 2025 01:20 AM

சென்னை: ஆசிய ஜூனியர் பளு துாக்குதல் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு, 25 லட்சம் ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டு உள்ளது.
பஹ்ரைன் நாட்டில், சமீபத்தில் மூன்றாவது ஆசிய ஜூனியர் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், பளுதுாக்குதல் பிரிவில், வெள்ளிபதக்கத்தை, தமிழகத்தை சேர்ந்த வீரர் மஹாராஜன் வென்றார்.
அவருக்கு தமிழக அரசு சார்பில், 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசோலையை, தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி நேற்று வழங்கினார்.
அ புதாபியில் வரும் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை, உலக சீனியர் கிக் பாக்ஸிங் போட்டி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள 11 பேருக்கு தலா 1.75 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியை சேர்ந்த, ஐந்து கூடைபந்து வீரர் - வீராங்கனையருக்கு, விளையாட்டு உபகரணங்கள் வாங்க, 2.75 லட்சம் ரூபாய்க்கான காசோலை; உலக திறன் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வாள்வீச்சு வீராங்கனை ெஷரந்தி தாமசுக்கு, 1.64 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் ஆகியவற்றை, துணை முதல்வர் வழங்கினார்.

