உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 22, 2026 07:48 PM
ADDED : அக் 22, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
திருச்சி: மலேஷியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட, 2.26 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று (அக்.,21) நள்ளிரவு, 'ஏர் ஏசியா' விமானத்தில் திருச்சி வந்த பயணியரை, விமான நிலைய கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
சந்தேகத்துக்கு இடமாக தென்பட்ட தம்பதியை தனியே அழைத்து சோதனையிட்டனர். உள்ளாடைகளில் செயின் வடிவில், 2.26 கோடி ரூபாய் மதிப்பில், 1.600 கிலோ தங்கத்தை அவர்கள் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தம்பதியை கைது செய்தனர்.
