ADDED : டிச 20, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த பெரிய நுாலகம் மற்றும் கருணாநிதி அறிவுசார் மையம் கட்ட, 290 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
'திருச்சியில் பெரிய நுாலகம் அமைக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம், சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
அதன்படி, திருச்சி மாவட்டம், செங்குளம் -கோ.அபிஷேகபுரம் பகுதியில், 1.97 லட்சம் சதுர அடி பரப்பளவில் பொது நுாலகம் கட்ட, 235 கோடி; புத்தகங்கள் வாங்க, 50 கோடி; தொழில்நுட்ப சாதனங்கள் வாங்க, 5 கோடி என, மொத்தம் 290 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.