sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடி; காங்கிரஸ் கொடுத்ததை விட மும்மடங்கு அதிகம் கொடுத்துள்ளோம்: பிரதமர் மோடி

/

தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடி; காங்கிரஸ் கொடுத்ததை விட மும்மடங்கு அதிகம் கொடுத்துள்ளோம்: பிரதமர் மோடி

தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடி; காங்கிரஸ் கொடுத்ததை விட மும்மடங்கு அதிகம் கொடுத்துள்ளோம்: பிரதமர் மோடி

தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடி; காங்கிரஸ் கொடுத்ததை விட மும்மடங்கு அதிகம் கொடுத்துள்ளோம்: பிரதமர் மோடி

12


UPDATED : ஜூலை 26, 2025 10:43 PM

ADDED : ஜூலை 26, 2025 09:12 PM

Google News

UPDATED : ஜூலை 26, 2025 10:43 PM ADDED : ஜூலை 26, 2025 09:12 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: ''தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்ட தொகையை விட 3 மடங்கு அதிகம்,'' என பிரதமர் மோடி கூறினார்.

தூத்துக்குடியில் ரூ.4,800 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை துவக்கி வைத்தும், முடிந்த திட்டங்களை துவக்கி வைத்தும் பிரதமர் மோடி உரையாற்றினார். வணக்கம் என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை துவக்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

இன்று கார்கில் வெற்றித் திருநாள். தியாகிகளுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். நான்கு நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்துக்கு பிறகு, ராமர் மண்ணில் இறங்கியது பாக்கியம். இந்தியா- பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியா மீது நம்பிக்கை அதிகரித்து வருவதன் அடையாளம் இது. இதனுடன் வளர்ச்சியடைந்த நாட்டை படைப்போம். வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்குவோம்.

சாட்சி


திருச்செந்தூர் முருகன் ஆசிர்வாதத்துடன் தூத்துக்குடியில் வளர்ச்சி பணிகளில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. 2014 ல் தமிழகத்தை வளர்ச்சியின் சிகரத்துக்கு கொண்டு செல்லும் லட்சிய பயணம் துவங்கப்பட்டது. தொடர்ந்து அதன் சாட்சியாக தூத்துக்குடி மாறுகிறது. கடந்த பிப்., மாதம் வஉசி துறைமுகத்தில் வெளிப்புற சரக்குபெட்டி முனையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Image 1448184பல கோடி மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டது. செப்டம்பரில் புதிய தூத்துக்குடி சர்வதேச சரக்கு பெட்டி முனையம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இன்று, 4,800 கோடி ரூபாய் மதிப்பு திட்டங்கள் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. அடிக்கல் நாட்டப்பட்டது.

விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், ரயில்வேயின் திட்டங்களோடு, எரிசக்தி துறை சார்ந்த முக்கியமான திட்டங்கள் உள்ளன. இதற்காக தமிழக மக்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.

உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி ஆகியவை மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு முதுகெலும்பு போன்றது. தமிழகத்தின் வளர்ச்சி நமக்கு எத்தனை முதன்மையானது என்பதை இந்த இரண்டு மீது நாம் செலுத்தும் கவனம் காட்டுகிறது. இன்றைய திட்டங்கள் இணைப்பு திறன், சுத்தமான எரிசக்தி, புதிய வாய்ப்புகள் ஆகியவற்றின் மையப்புள்ளியாக தமிழகத்தையும், தூத்துக்குடியையும் உருவாக்கும்.

Image 1448185

வஉசிக்கு புகழாரம்


தமிழகம் மற்றும் தூத்துக்குடி மண்ணும், மக்களும் பல நூற்றாண்டு காலமாக தன்னிறைவான சக்தி படைத்த இந்தியாவுக்காக தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர். வஉசி போன்ற தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் இங்கு உருவானார்கள். அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் கூட கடல் வழி வாணிபத்தின் சக்தியை புரிந்து கொண்டவர் அவர். ஆழ்கடல் மீது சுதேசி கப்பலை செலுத்தி ஆங்கிலேயருக்கு சவால் விட்டவர் வஉசி. இந்த மண்ணில்தான் வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன் போன்றவர்கள் சுதந்திரமான வல்லமை மிகுந்த பாரதம் படைக்க கனவு கண்டார்கள்.

காசி தமிழ் சங்கமம்


பாரதியார் போன்ற தேசிய கவிஞர் கூட இங்கு தான் பிறந்தார். தூத்துக்குடிக்கும் பாரதியாருக்கும் எந்தளவு பலமான உறவு உள்ளதோ அந்தளவு பலமான உறவு வாரணாசியுடன் உள்ளது. காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக நமது கலாசார மரபுகளை வலுப்படுத்தி வருகிறோம்.

பாண்டிய நாட்டு முத்துகள்

கடந்த ஆண்டு தான் தூத்துக்குடியின் பிரபலமான முத்துகளை பில்கேட்சுக்கு பரிசாக அளித்தேன். அந்த முத்துகள் அவருக்கு பிடித்து இருந்தது. பாண்டிய நாட்டு முத்துகள், இந்தியாவின் பொருளாதார வல்லமையாக இருந்து வந்தது. நமது முயற்சிகள் காரணமாக வளர்ச்சியடைந்த தமிழகம், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையுடன் முன்னேறி வருகிறோம்.

தேவை அதிகரிப்பு

இந்தியா பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கூட இந்த தொலைநோக்கு பார்வைக்கு வேகம் அளிக்கிறது. உலகம் தனது வளர்ச்சியை காண்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய பலம் அளிக்கும். இதனால், உலகின் 3வது பொருளாதார நாடு இந்தியா என்ற நிலை ஏற்படும். இந்த ஒப்பந்தத்துக்கு பிறகு பிரிட்டனில் விற்பனையாகும் 99 சதவீத பொருட்கள் மீது எந்த வரியும் விதிக்கப்படாது. அங்கு இந்திய பொருட்கள் விலை குறைவாக இருக்கும். தேவையும் அதிகரிக்கும். இதனால், இங்கு உற்பத்தி செய்ய வேண்டிய தேவை அதிகரிக்கும்.



Image 1448186தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நமது இளைஞர்களுக்கு சிறுகுறு நடுத்தர தொழில்துறைக்கு ஸ்டார்ட் அப் துறைகளுக்கு பலன் அளிக்கும். இதனால், தொழில் துறை, மீனவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பலன் கிடைக்கும். மேக் இன் இந்தியா திட்டத்துக்கு மத்திய அரசு அதிக வலு சேர்க்கிறது.

உள்நாட்டு ஆயுதங்கள்

ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவில் தயாரிப்போம் என்ற நோக்கத்தின் பலம் தெளிவாக தெரிந்தது. பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை மண்ணோடு மண்ணாக்கியதில் இந்தியாவில் தயாரான ஆயுதங்களின் பங்கு அதிகம் இருந்தது. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இன்றும் கூட பயங்கரவாதத்தை ஆதரித்தவர்களை தூங்க விடாமல் செய்துள்ளது.



ஒருங்கிணைப்பு

தமிழகத்தின் ஆற்றல் வளத்தை முழுமையாக பயன்படுத்த, தமிழகத்தின் உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் துறைமுக கட்டமைப்புகளை உயர் தொழில்நுட்பம் கொண்டதாக மாற்றுகிறோம். விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வேத்துறை இடையே பரஸ்பர ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வருகிறோம்.

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய மேம்பட்ட முனைய துவக்க விழா, புதிய முன்னெடுப்பு ஆகும். ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம், ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை கையாளும். முன்பு ஆண்டுக்கு 3 லட்சம் பயணிகளை மட்டும் கையாண்டதாக இது இருந்தது.

ஊக்கம்


இந்த புதிய முனையம் துவக்கப்பட்ட பிறகு வரவிருக்கும் காலத்தில் நாட்டின் பல இடங்கள் வரை தூத்துக்குடியின் இணைப்பு அதிகரிக்கும். அப்போது, இங்குள்ள வியாபாரத்துக்கும் தொழில்களுக்கு ஊக்கம் கிடைக்கும். தமிழகத்தில் பெரு நிறுவனங்கள், பயணங்கள், மருத்துவ கட்டமைப்பு ஆகியவற்றுக்கு பலன் கிடைக்கும். சுற்றுலாவுக்கான சாத்தியக் கூறுகளுக்கும் புது திறன் கிடைக்கும்.

சென்னையுடன் இணைப்பு

ரூ.2,500 கோடியில், தமிழகத்தின் இரண்டுபெரிய சாலை கட்டமைப்பு திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்துள்ளோம். இவை இரண்டு பெரிய வளர்ச்சி பகுதிகளை சென்னையுடன் இந்த சாலைகள் இணைக்கும். இந்த சாலைகள் டெல்டா மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும்.



முக்கிய மையம்


இந்த திட்டங்களின் உதவியோடு தூத்துக்குடி துறைமுகத்தின் இணைப்பு சிறப்பாக மாறி உள்ளது. இந்த சாலைகள் எளிதாக வாழும் திறனை அதிகரிக்கும். வேலைவாய்ப்பு, வர்த்தகம் ஆகியவற்றுக்கான புதிய பாதையை திறக்கும்.நாட்டின் ரயில்வேயை தேசத்தின் வளர்ச்சி, தன்னிறைவு இந்தியாவின் உயிர்நாடியாக கருதுகிறது. இதனால்,ரயில்வேத்துறையின் கட்டமைப்பு நவீனமயமாக்கம் என்பதை கடந்துவந்துள்ளது. ரயில்வேத்துறை கட்டமைப்பு இயக்கத்தின் முக்கியமான மையமாக தமிழகம் விளங்குகிறது.

வணிகம் எளிது

தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளது. நவீன வந்தே பாரத் ரயில்கள் மூலம் தமிழக மக்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கிறது. நாட்டின் முதல்மற்றும் தனித்துவம் வாய்ந்த செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் பாலம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் வணிகம் மற்றும் பயணம் ஆகியவை எளிதாகி உள்ளது.

நாட்டில் மிகப்பெரிய கட்டமைப்புகளை மேம்படுத்தும் வேள்வி நடக்கிறது. சிலநாட்கள் முன்பு துவங்கப்பட்ட காஷ்மீரின் செனாப் பாலம் பொறியியலின் அற்புதமாக கருதப்படுகிறது. முதல்முறையாக ஸ்ரீநகர் ரயில் வாயிலாக ஜம்மு இணைக்கப்பட்டது.

உலகின் மிகவும் நீளமான பாலமான அடல் பாலம் உருவாக்கப்பட்டது. 6 கி.மீ., நீளம் கொண்ட சோன்மார்க் சுரங்கத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதுபோன்ற ஏராளமான திட்டங்களை தேஜ அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ள ரயில் திட்டங்களால், தென் தமிழக மக்களுக்கு பலன் ஏற்படும்.மதுரை போடி நாயக்கனூர் ரயில் பாதை மின்மயமாக்கியதால், வந்தே பாரத் போன்ற ரயில் இயக்குவதற்கான வழி ஏற்பட்டுள்ளது.இந்த ரயில் திட்டங்களை தமிழகத்தின் வேகத்தை, வளர்ச்சியின் வீச்சுக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும். சூரிய மின்சக்தி மேற்கூரை அமைக்க 1 லட்சம் விண்ணப்பம் வந்தள்ளது. 40 ஆயிரம் சூரிய சக்தி கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.



மருத்துவக் கல்லூரிகள்

தமிழகத்தின் வளர்ச்சி என்பது நமது முக்கியமான உறுதி. தமிழகத்தின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடியை 10 ஆண்டுகளில் அளித்துள்ளோம்.

இந்த தொகை கடந்த காங்கிரஸ் அரசு அளித்த தொகையை விட 3 மடங்கு அதிகமானதாகும். 11 ஆண்டுகளில் தமிழகத்துக்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தந்துள்ளோம். நீலப்புரட்சி வாயிலாக கரையோர பொருளாதாரத்தை விரிவாக்கம் செய்கிறோம். தூத்துக்குடியின் இந்த மண் புதிய புரட்சியின் சாட்சியாக ஆகி உள்ளது. இணைப்பு, மின்பரிமாற்றம், கட்டமைப்பு இணைந்தஅனைத்து திட்டங்களும் வளர்ச்சியடைந்த தமிழகம், வளர்ச்சியடைந்த பாரதம் ஆகியவற்றின் ஆதாரமாக மாறி உள்ளது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வேண்டுகோள்

பிரதமர் மோடி இறுதியாக, துாத்துக்குடியில் கூடியிருக்கும் மக்களே! உங்கள் கரைபுரண்டு ஓடும் உற்சாகத்தை இன்று காண்கிறேன். அதை வெளிப்படுத்தும் வகையில் மொபைல் போனில் வெளிச்சம் காட்டுங்கள். வணக்கம் எனக்கூறினார்.மோடி வேண்டுகோள் விடுத்ததும், திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பேர் மொபைல் போனில் மைதானத்தை ஒளிர வைத்தனர்.



இதனைத் தொடர்ந்து விமான முனைய கட்டடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, கவர்னர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us