ADDED : மார் 19, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிகாரி ஹரிகரன் தலைமையிலான பறக்கும் படையினர் பேரையூர் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
காராம்பட்டி அ.தி.மு.க., கிளைச் செயலாளர் கிருபாகரன் 29, காரை தடுத்து சோதனையிட்டனர். அதில் ஆவணங்கள் இல்லாமல் ரூ.3 லட்சம் பணம் இருந்தது. கான்ட்ராக்ட் பணிக்காக கொண்டு செல்வதாக தெரிவித்தார். பறிமுதல் செய்த அதிகாரிகள் அதற்கான ஆவணங்களை கொடுத்து பெற்றுச் செல்லுமாறு தெரிவித்தனர்.

