sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.3 ஆயிரம் பொங்கல் ரொக்கப்பரிசு; அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்: அன்றே சொன்னது தினமலர்

/

ரூ.3 ஆயிரம் பொங்கல் ரொக்கப்பரிசு; அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்: அன்றே சொன்னது தினமலர்

ரூ.3 ஆயிரம் பொங்கல் ரொக்கப்பரிசு; அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்: அன்றே சொன்னது தினமலர்

ரூ.3 ஆயிரம் பொங்கல் ரொக்கப்பரிசு; அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்: அன்றே சொன்னது தினமலர்

39


UPDATED : ஜன 04, 2026 02:35 PM

ADDED : ஜன 04, 2026 12:12 PM

Google News

UPDATED : ஜன 04, 2026 02:35 PM ADDED : ஜன 04, 2026 12:12 PM

39


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் ரொக்கப்பரிசு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், வரும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் இருந்தது.

அதன்படி அரசு அதிகாரிகளிடம், முதல்வர், அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக தினமலர் நாளிதழ் டிச.,10ம் தேதி தலைப்புச்செய்தி வெளியிட்டிருந்தது.

அதில் குறிப்பிட்டதை போலவே, இன்று முதல்வர் ஸ்டாலின் பொங்கல் ரொக்கப்பரிசு அறிவித்துள்ளார். ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2.25 கோடி குடும்பங்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ. 6,936 கோடி செலவு

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும். 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலையும் வழங்கப்படும். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப்பரிசும், பொங்கல் தொகுப்பும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும். பொங்கல் ரொக்கப்பரிசு 2.23 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கிட ரூ. 6,936 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Image 1517219

மகிழ்ச்சி பொங்கும்!

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல். உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3,000 திராவிட மாடல் அரசு வழங்குகிறது '' என குறிப்பிட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us