UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 06:15 PM
சென்னை: ஆசிய விளையாட்டு போட்டியில், வெண்கலம் வென்ற, இந்திய ஸ்குவாஷ் அணியில் இடம் பெற்றிருந்த, தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனா ரியாஸுக்கு, தலா 30 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஜப்பானில் நடந்து வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் பெண்கள் குழுப் பிரிவில், இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த அணியில் இடம் பெற்றிருந்த, தமிழகத்தை சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனா ரியாஸ் ஆகியோருக்கு பாராட்டுகள்.
இச்சாதனையை பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில், தலா 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது திறமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றால் பெற்றுள்ள இவ்வெற்றி, தமிழக விளையாட்டுத் திறனுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
