தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘கூட்டுறவு சங்க பரிவர்த்தனைகளுக்கு வெளிப்படைத்தன்மை தேவை’

‘கூட்டுறவு சங்க பரிவர்த்தனைகளுக்கு வெளிப்படைத்தன்மை தேவை’

‘கூட்டுறவு சங்க பரிவர்த்தனைகளுக்கு வெளிப்படைத்தன்மை தேவை’


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 06:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 06:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், உரிய வசதிகளை ஏற்படுத்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், மலைவாழ் மக்களுக்கான பெரும் வளர்ச்சி கூட்டுறவு சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட 4,000க்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில், ஒவ்வொரு சங்கத்திலும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர்.

உறுப்பினர்கள் சேமிப்பு பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், கடன் பெறுதல், கடன் தவணை மற்றும் வட்டி செலுத்துதல், பங்கு தொகை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.

ஆனால், இந்த பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் உறுப்பினர்களின் மொபைல்போன் எண்ணுக்கு உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்படுவதில்லை என, புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, கணக்கில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், கடன் தொகை பெறுதல், கடன் தவணை மற்றும் வட்டி செலுத்துதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளின் விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதி வேண்டும்.

மேலும், கணக்கில் உள்ள இருப்புத்தொகை, கடன் நிலுவை, செலுத்திய தவணைகள் மற்றும் வட்டி விபரங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர்.

உறுப்பினர்கள் கூறுகையில், ‘வங்கிகளில் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளுக்கு உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்., வாயிலாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கூட்டுறவு கடன் சங்கங்களில், இந்த வசதி இல்லாததால், கணக்கில் நடைபெறும் வரவு – செலவுகளை உடனுக்குடன் சரிபார்க்க முடியாத நிலை உள்ளது.

கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, உறுப்பினர்களின் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக தகவல் தெரிவிக்கும் வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us