பள்ளிவாசலில் ரூ 3.5 லட்சம் பணம், தங்க காசுகள் திருட்டு; போலீசார் விசாரனை
பள்ளிவாசலில் ரூ 3.5 லட்சம் பணம், தங்க காசுகள் திருட்டு; போலீசார் விசாரனை
ADDED : பிப் 13, 2025 09:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காரைக்குடி அருகே பள்ளிவாசலில் ரூ 3.5 லட்சம் பணம், தங்க காசுகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காட்டு தலை வாசல் பகுதியில் அல் ஜாமிஉல் முனவ்வர் மஸ்ஜித் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இங்கு மூன்றரை லட்சம் பணம் மற்றும் தங்கக்காசுகள் நேற்று மர்ம நபரால் திருடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நள்ளிரவில் மாஸ்க் அணிந்து வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மசூதி சார்பில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்றிற்காக வசூலித்த மூன்றரை லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளிவாசலில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.