ADDED : நவ 22, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் புதியகான்கிரீட் வீடுகள் கட்ட வீட்டுக்கு 3.50 லட்சம் ரூபாய் வீதம் 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் இதுவரை, 15,350 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அரசு தரப்பில், 150 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் மேலும், 450 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.