ADDED : அக் 15, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கார்கில் நிவாரண நிதியில் இருந்து, மறைந்த ராணுவ வீரர் மனைவிக்கு, 40 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்பட்டது.
வடக்கு சிக்கிமில் உள்ள ரோங்லி சூவில், பாதுகாப்பு பணியின்போது தமிழகத்தை சேர்ந்த இளநிலை படை அலுவலர் தங்கபாண்டி, கடந்த மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மனைவி வளர்மதிக்கு, கார்கில் நிவாரண நிதியில் இருந்து, கருணைத் தொகையாக 40 லட்சம் ரூபாய்க்கான காசோலை நேற்று வழங்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி, காசோலையை வழங்கி, ஆறுதல் கூறினார். அப்போது பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர், கூடுதல் செயலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.