ADDED : செப் 16, 2025 11:58 PM
சென்னை:நீராதாரங்களில் ஆகாய தாமரை அகற்றும் பணிகளை மேற்கொள்ள, நீர்வளத் துறைக்கு, 50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
நீராதாரங்களை மேம்படுத்தும் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டம், 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, பல்வேறு திட்ட பணிக ளுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு வருகிறது.
பல்வேறு மாவட்டங்களில் ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் ஆகாய தாமரை, வேலி காத்தான் உள்ளிட்ட செடி, கொடிகள் அடர்ந்து கிடக்கின்றன.
இதனால், பாசனத் திற்கு நீர் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில், வெள்ள நீரோட்டம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து, நீர்வழித்தடங்களில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற, 50 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

