ADDED : ஏப் 20, 2026 05:59 PM
திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க., நிர்வாகியிடம் ரூ.50 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் கோடாங்கி தோப்பு தெரு பகுதியில் ஏப்ரல் 19 ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு தி.மு.க.,வை சேர்ந்தவர் டூவீலரில் பணத்துடன் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. பறக்கும் படையினருடன் இணைந்து போலீசார், டூவீலரில் சென்ற அந்த நபரிடம் விசாரித்தனர். அவர் பாம்பன் நகர் தி.மு.க., தொண்டரணி நிர்வாகி நாகலிங்கம் எனத்தெரிந்தது. டூவீலரில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் இருந்தது. அதை பறிமுதல் செய்து நாகலிங்கத்தை கைது செய்தனர். பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தகவல் அறிந்த அத்தொகுதி த.வெ.க., வேட்பாளர் நிர்மல்குமார் திருப்பரங்குன்றம் போலீஸ் ஸ்டேஷன் வந்தார்.
அவர் கூறுகையில், ''கைது செய்யப்பட்ட நபரின் அலைபேசி எண்களை ஆய்வு செய்ய வேண்டும். இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் கமிஷனருக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம்'' என்றார்.
