தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ குட்கா வழக்கில் ரூ. 50,000 லஞ்சம்; ஏட்டு சஸ்பெண்ட்

 குட்கா வழக்கில் ரூ. 50,000 லஞ்சம்; ஏட்டு சஸ்பெண்ட்

 குட்கா வழக்கில் ரூ. 50,000 லஞ்சம்; ஏட்டு சஸ்பெண்ட்


ADDED : செப் 12, 2026 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 10:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே குட்கா வழக்கில், பெட்டிக்கடைக்காரரிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பகுதி கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, கடந்த மாதம் பொறையார் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்து, பறிமுதல் செய்தனர்.

அப்போது, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க, கடை உரிமையாளரிடம் போலீசார் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும், கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர், போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துளளார்.

இதுகுறித்து மயிலாடுதுறை எஸ்.பி., சினேகா பிரியா விசாரணை நடத்தியதில், கடை உரிமையாளரிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. அதையடுத்து, பொறையாளர் போலீஸ் ஏட்டு அன்பரசன் என்பவரை கடந்த வாரம் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்தார். தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து வருகிறது. எஸ்.பி.,யிடம் இந்த அதிரடி நடவடிக்கை, மயிலாடுதுறை மாவட்ட போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us