உள்ளடக்கத்திற்கு செல்ல

மின் வாகன 'சார்ஜிங்' நிலையம் அமைக்க ரூ.50,000 மானியம்
மின் வாகன 'சார்ஜிங்' நிலையம் அமைக்க ரூ.50,000 மானியம்
ADDED : ஆக 22, 2026 04:26 AM

அ நிறம் | அளவு
சென்னை: சட்டசபையில் வெளியிடப்பட்ட எரிசக்தி துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் 2031க்குள் மாநிலம் முழுதும், 20,000 மின்சார வாகன 'சார்ஜிங்' நிலையங்களை நிறுவ, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், முக்கிய நகரங்களை இணைக்கும் முன்னுரிமை வழித்தடங்களில், சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.
அரசு, அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில், மின் வாகன சார்ஜிங் வசதிகளை நிறுவுவதற்கு, திட்ட செலவில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சம், 50,000 ரூபாய் வரை, மூலதன மானியம் வழங்க திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
