கல்லுாரி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் திறன் பயிற்சி
கல்லுாரி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் திறன் பயிற்சி
ADDED : ஆக 22, 2026 04:24 AM
சென்னை: 'கல்லுாரி மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி., மெட்ராஸ் வாயிலாக, திறன் பயிற்சி வழங்கப்படும்,' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டசபையில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்:
வெற்றித்திறன் பயிற்சி திட்டத்தில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற, சான்றிதழ்களுடன் கூடிய, பாதுகாப்பு திறனாளர்களை உருவாக்க பயிற்சி, ஒரு கோடி ரூபாயில் வழங்கப்படும்
வெற்றித்திறன் பயிற்சி திட்டத்தில், உயர் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தொழில்துறை சார்ந்த உலகளாவிய சான்றிதழ் பயிற்சி, 5 கோடி ரூபாயில் வழங்கப்படும்
வெற்றித்திறன் பயிற்சி திட்டத்தில், கல்லுாரி மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி., மெட்ராஸ் வாயிலாக, சிறப்பு திறன் பயிற்சி வழங்கப்படும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த, வேலைவாய்ப்பு இல்லாத, ஐ.டி., பட்டதாரிகளுக்கு, சர்வதேச சான்றிதழ் பயிற்சியின் வாயிலாக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், வேலைவாய்ப்பு பெறுவதற்கான திட்டம் உருவாக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
