குற்றங்களால் பாதிக்கப்பட்ட 214 பேருக்கு ரூ.5.18 கோடி
குற்றங்களால் பாதிக்கப்பட்ட 214 பேருக்கு ரூ.5.18 கோடி
ADDED : மே 15, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில், கடந்த ஆண்டு, கொலை உள்ளிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களைச் சேர்ந்த 214 பேருக்கு, 5.18 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.
டி.ஜி.பி., அலுவலக, அதிகாரிகள் கூறியதாவது:
கொலை, பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு, ஆள் கடத்தல் உள்ளிட்ட கொடுங்குற்றங்களால் பாதிக்கப்படுவோரின் குடும்பங்கள், இயல்பு நிலைக்கு திரும்ப, பல மாதங்களாகின்றன. இந்த காலகட்டத்தில் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர்.
இதனால், அரசு சார்பில், குற்றங்களால் பாதிக்கப்படுவோருக்கு, இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில், கொலை உட்பட பல்வேறு குற்றங்களால் பாதிக்கப்பட்ட 214 பேருக்கு, 5.18 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.