ADDED : மார் 04, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சரவணன் 45. நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மேலாளராக திருநெல்வேலி சாந்திநகரை சேர்ந்த அப்துல் குபூர் 48, கணக்காளராக அம்பாசமுத்திரம் காசி விஸ்வநாதர் கோயில் தெருவை சேர்ந்த மகாராஜா சுப்பிரமணியம் 30, பணியாற்றினர்.
இவர்கள் போலியான கணக்குகளை ஏற்படுத்தி 6 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளனர். சரவணன் புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

