ADDED : பிப் 12, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி, கள்ளச்சந்தையில் பணத்திற்கு விற்கின்றனர்.
இதை தடுக்கும் பணியில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை, தமிழகம் முழுதும் ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக, 11,085 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இவற்றின் வாயிலாக, 9.24 கோடி ரூபாய் மதிப்புள்ள, 33,980 குவிண்டால் அரிசி, 18,898 லிட்டர் மண்ணெண்ணெய் உள்ளிட்டவை பறிமுதலாகி உள்ளன.
ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக 11,571 பேர் கைது செய்யப்பட்டு, 2,012 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 89 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

