ADDED : செப் 03, 2026 01:08 AM

சட்டசபையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி வெளியிட்ட அறிவிப்புகள்:
பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களின், வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 70 லட்சம் ரூபாயில், 50 சதவீத மானியத்துடன், பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைக்கப்படும்
கோழிகளுக்கு பரவும் நோய்களைக் கண்டறிய, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், 30 கோடி ரூபாயில், 'உயிரியல் பாதுகாப்பு நிலை 3' ஆய்வகம் அமைக்கப்படும்
சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு கால்நடைப் பண்ணையில், கிடேரி வளர்ப்பு மையம் அமைக்கப்படும்
நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில், 71 லட்சம் ரூபாயில் பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்கப்படும்
ஊட்டி மாவட்ட கால்நடைப் பண்ணையில், 6.60 கோடி ரூபாயில், பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து உற்பத்தி செய்யப்படும்
கால்நடை மருத்துவ நிலையங்கள், செயற்கை கருவூட்டல் பணியாளர்களின் சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரிக்க, 'கால்நடை காவலன் விருது' வழங்கப்படும்
ஜல்லிக்கட்டு நடத்த, 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும். இந்த விளையாட்டை சர்வதேச பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்த சுற்றுலாத்துறையுடன் இணைந்து, ஓ.டி.டி., தளம் மற்றும் சமூக வலைளதங்களில் ஒளிபரப்பப்படும்
ரேக்ளா பந்தய போட்டிகள் நடத்தவும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். ரேக்ளா பந்தயம் நடத்து வதற்கு சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும்
தேர்தல் வாக்குறுதியின்படி, கால்நடை காப்போம் காப்பீடு திட்டம், 31 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
