ADDED : செப் 19, 2024 10:59 PM
சென்னை:'முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை' திட்டத்தின் கீழ், பிஎச்டி., படிக்கும் மாற்றுத்திறன் மாணவர்கள், 50 பேருக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், 5ம் வகுப்பு வரை 2,000; ஆறு முதல் எட்டு வரை; 6,000; ஒன்பது முதல் பிளஸ் 2 வரை 8,000; பட்டப்படிப்புக்கு 12,000; முதுகலை பட்டத்திற்கு 14,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு முதல், 'முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை' என்ற புதிய திட்டத்தின் கீழ், பிஎச்டி., படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் வீதம், 50 மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க, தமிழக அரசு, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.