தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மாணவர்களுக்கு ‘லேப்டாப்’ ரூ.2,000 கோடி ஒதுக்கீடு

மாணவர்களுக்கு ‘லேப்டாப்’ ரூ.2,000 கோடி ஒதுக்கீடு

மாணவர்களுக்கு ‘லேப்டாப்’ ரூ.2,000 கோடி ஒதுக்கீடு


UPDATED : நவ 08, 2026 12:00 AM

ADDED : நவ 07, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 12:00 AM ADDED : நவ 07, 2026 06:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச ‘லேப்டாப்’ வழங்கும் திட்டத்தை, 2,000 கோடி ரூபாயில் செயல்படுத்த, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கல்லுாரி மாணவர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவும், திறன் மேம்பாட்டு பயிற்சி களை மேற்கொள்ளவும், லேப்டாப் பெரிதும் உதவும். இதை கருத்தில் வைத்து, நடப்பாண்டு பட்ஜெட்டில், ‘வெற்றி மடிக்கணினி’ திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை, 2,000 கோடி ரூபாயில் செயல்படுத்த, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற் கான வழிகாட்டு நெறிமுறை களும், நிதி ஒதுக்கீட்டிற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது

நடப்பு கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரிகள், ஐ.டி.ஐ., மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை, சட்டக்கல்லுாரி போன்றவற்றில், முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மாணவர்கள் இத்திட்டத்தால் பயனடைவர்.

கடந்த 2025 – 26ம் கல்வி யாண்டில், ‘லேப்டாப்’ திட்டத்தில் பயனடையாத, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் படிக்கும், மூன்று மற்றும் நான்காம் ஆண்டு, தொழில்முறை படிப்பு மாணவர்களும், இத்திட்டத் தில் பயனடைவர்.

பொறியியல் மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வி தேவைகளை கருத்தில் வைத்து, அவர்களுக்கு உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய, லேப்டாப்கள் வழங்கப்படும்.

இத்திட்டத்தை செயல்படுத்த, முதல்வர் தலைமையில், உயர்மட்ட வழிகாட்டு தல் குழு அமைக்கப்பட உள்ளது. லேப்டாப் கொள்முதல் செய்ய, ‘எல்காட்’ எனப்படும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us