பழங்குடியினர் மொழிகளை அறிய 16 சான்றிதழ் படிப்பு தொடக்கம்
பழங்குடியினர் மொழிகளை அறிய 16 சான்றிதழ் படிப்பு தொடக்கம்
UPDATED : நவ 08, 2026 12:00 AM
ADDED : நவ 07, 2026 06:02 PM
சென்னை: பழங்குடியினர் கலாசாரம் தொடர்பான, 16 வார சான்றிதழ் வகுப்புகளை, பழங்குடியினர் ஆய்வு மையம் வழியே நடத்த, 89.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின மொழிகள் குறித்து, அனைத்து மக்களும் அறிந்து கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவும், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பழங்குடியினர் ஆய்வு மையம் வழியே, சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்படும் என, சட்டசபையில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
அதை செயல்படுத்த, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இருளர், பெட்டக் குறும்பர், வொக்ரிபோலி, கோத்தர், காணி, சோளகர், பாலியர் மொழிகள், சமூகம் மற்றும் கலாசாரம் தொடர்பான, 16 வார சான்றிதழ் வகுப்புகள், பழங்குடியினர் ஆய்வு மையம் வழியே, நடத்தப்பட உள்ளன.
இதற்காக, 89.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
