தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நிலத்தடி நீரை உறிஞ்சினால் ரூ.40,000 அபராதம்

 நிலத்தடி நீரை உறிஞ்சினால் ரூ.40,000 அபராதம்

 நிலத்தடி நீரை உறிஞ்சினால் ரூ.40,000 அபராதம்


ADDED : ஜன 25, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்நாடு நீர்வளங்கள் ஒழுங்குமுறைபடுத்துதல், மேலாண்மை மற்றும் பெருக்கம் செய்தல் தொடர்பான சட்டத்தை இயற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட மசோதா, நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

இந்த சட்டம் வாயிலாக, தமிழ்நாடு நீர்வள மேலாண்மை ஆணையம், மாவட்ட குழுக்கள் அமைக்கப்படும்.

மாநில மற்றும் மாவட்ட நீர்வள மேலாண்மை திட்டங்களை உருவாக்கவும், தற்போதுள்ள மற்றும் புதிய வணிக நீர் பயனாளர்களை முறைப்படுத்தவும், இந்த சட்டம் உதவும். பயனாளர்களால் உறிஞ்சி எடுக்கப்படும் நீருக்கான கட்டணத்தை விதிப்பதற்கும், வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கும் வழிவகை செய்யும்.

இந்த சட்டத்தின்படி, முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பவர்கள் மீது, 10,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 40,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us