ஆளுங்கட்சியினர் அத்துமீறல்; போலீசாரின் கைகளுக்கு கட்டு: அண்ணாமலை குற்றச்சாட்டு
ஆளுங்கட்சியினர் அத்துமீறல்; போலீசாரின் கைகளுக்கு கட்டு: அண்ணாமலை குற்றச்சாட்டு
ADDED : டிச 28, 2024 01:37 PM

சென்னை: 'போலீசார் பொறுத்தவரை நிறைய தவறுகள் செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஆளுங்கட்சியினர் அத்துமீறி, போலீசாரின் கைகளை கட்டி போட்டு இருக்கிறார்கள்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நினைவு தினமான இன்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், அண்ணாமலை கூறியதாவது: விஜயகாந்த் நினைவு நாள் பேரணிக்கு, அனுமதி மறுத்தது பழிவாங்கும் நோக்கில் என்று சொல்வதை விட அதற்கும் மேலாக நான் பார்க்கிறேன். 1 கி.மீ., பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அரசியல் காழ்ப்புணர்ச்சியாக தான் பார்க்கிறோம்.
போலீசாரை பொறுத்தவரை நிறைய தவறுகள் செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஆளுங்கட்சியின் அத்துமீறல் காரணமாக போலீசாரின் கைகளை கட்டி போட்டு இருக்கிறார்கள். இதனால் போலீசார் இனியாவது தங்களை திருத்தி கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
பேரணிக்கு அனுமதி மறுப்பு, என்று முந்தைய நாள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் சொல்லி இருக்க வேண்டும். தமிழக போலீசாரை பொறுத்தவரை, முந்தைய நாள் இரவு சொன்னால் தான் அவர்கள் எப்படி கோர்ட்டுக்கு போவார்கள்? எப்படி அனுமதி வாங்குவார்கள்? என்பதை பார்பதற்காக அனுமதி மறுக்கப்பட்டது போல் தெரிகிறது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.