ADDED : ஜூன் 28, 2024 12:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக கவர்னர் ரவியை தேமுதிக., பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து மனு கொடுத்தார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து இருந்தால் உயிரிழப்பு தடுத்து இருக்கலாம். தற்போது கள்ளச்சாராயத்தை ஒழிப்பதாக நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆட்சியாளர்கள் மதுபான ஆலையை நடத்துகிறார்கள். பிறகு விசாரணை எப்படி நேர்மையாக நடக்கும். கவர்னர் நாங்கள் கூறியதை கவனமாக கேட்டார். கவர்னர் நாங்கள் கூறியதை கவனமாக கேட்டார். குடியை கொடுத்து கோடிகளால் சம்பாதிக்கிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள். இவ்வாறு பிரேமலதா கூறினார்.