sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/வருத்த நடிப்பு

வருத்த நடிப்பு

வருத்த நடிப்பு


ADDED : ஏப் 04, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 06:26 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாமரை கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானதும், கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பட்டியலை ஆர்வமாக பார்த்தனராம். துவக்கத்தில் இருந்து 27வது பெயர் வரை பார்த்தவர்கள், மலை பெயர் இல்லை என்றதும் சந்தோஷமாகி விட்டனராம். ஆனால், உடனே கண்ணுாரில் பிரசாரத்தில் இருந்த மலை தலைவருக்கு போன் போட்டு பேசினராம். வருத்தம் தொனிப்பது போல பேசி நடிக்க, அந்தப் பக்கம் மலையிடம் இருந்து பெரிதாக ரியாக்ஷன் இல்லையாம்.

'ஆடியோ அலெர்ட்'


சூ ரிய கட்சித் தலைவர் சமீபத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரை அழைத்துப் பேசினாராம். அப்போது, 'நம் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஏற்கனவே கட்சிக்கு எதிராக செய்த காரியங்கள் மற்றும் பேச்சுகள் அடங்கிய 'ஆடியோ' தொகுப்பை சேகரித்து வைத்துள்ளனர். அதை, தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதனால், அனைவரும் உஷாராக இருங்கள். மீறி வெளியானால் அமைதியாக இருங்கள்' எனக்கூறி எச்சரிக்கை மணி அடித்தாராம்.



துட்டு தரும் தோழி


3. மறைந்த முதல்வர் தோழியும் இம்முறை தேர்தலில், திண்டிவனத்து தலைவரோடு கைகோர்த்து களம் காண அறிவிப்பு வெளியிட, துவக்கத்தில் போட்டியிட பலரும் தயக்கம் காட்டினராம். ஆனால், தோழி தரப்பில் இருந்து நிறைய துட்டு தருகிறார்கள் என கிளப்பிவிட, தமிழகம் முழுதும் இருந்து வீடு தேடி நிறைய பேர் வருகின்றனராம். 'அம்மா நீங்க சொன்னா நாங்க போட்டி போடறோம்' என்று சொல்ல, தற்போது, தகுதி பார்த்து வேட்பாளரை தேர்வு செய்ய துவங்கி இருக்கிறாராம் தோழி.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us