ADDED : அக் 03, 2025 03:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சடையாண்டி சுவாமி கோயில் திருவிழா நடந்தது.
இத்திருவிழாவை முன்னிட்டு அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோயிலிலிருந்து சுவாமி பெட்டி மேளதா ளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சடையாண்டி சுவாமி கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற நள்ளிரவு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைக்கு பின் கறிவிருந்து நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்தனர்.